Skip to product information
1 of 5

Katyayani Organics

காத்யாயனி தயோக்சம் | தயாமெதோக்சம் 25% WG | இரசாயன பூச்சிக்கொல்லி

காத்யாயனி தயோக்சம் | தயாமெதோக்சம் 25% WG | இரசாயன பூச்சிக்கொல்லி

Regular price Rs.248
Regular price Rs.248 Rs.400 Sale price
Saving Rs.152
Over 100+ sold today!
Quantity

Product Description

காத்யாயனி தயோக்சம் என்பது ஒரு பரந்த செயலாற்றல் கொண்ட பூச்சிக்கொல்லி ஆகும், இதில் 25% தயாமெதாக்சம் என்ற மூலக்கூற்று பொருள் உள்ளடங்கி உள்ளது. இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை பாதிக்க செய்கிறது. தயாமெதோக்சம் 25% WG என்பது நீரில் கரையும் குருணை (WG) பூச்சிக்கொல்லி ஆகும்.

தயோக்சம்-ன் இலக்கு பூச்சிகள் 

காத்யாயனி தயாமெதோக்சம் 25 wg பூச்சிக்கொல்லி பலவிதமான பூச்சிகளுக்கு எதிராக செயல்படுகிறது, அவற்றுள்:

  • தண்டு துளைப்பான்
  • இலை சுருட்டுப்புழு
  • புகையான் பூச்சி
  • பச்சை தத்துப்பூச்சி
  • இலைப்பேன்
  • தத்துப்பூச்சி
  • அசுவினி
  • வெள்ளை ஈ

தயோக்சம்-ன் இலக்கு பயிர்கள்

காத்யாயனி தயோக்சம் பல்வேறு பயிர்களில் பயன்படுத்தப்படலாம், அவற்றுள்:

  • நெல்
  • பருத்தி
  • வெண்டை
  • மா
  • கோதுமை
  • கடுகு
  • தக்காளி
  • உருளைக்கிழங்கு

செயல் முறை (தயாமெதோக்சம் 25% WG)

தயாமெதோக்சம் 25% WG என்பது ஊடுறுவி கொல்லும் பூச்சிக்கொல்லியாகும், இது பல்வேறு பயிர்களில் இலைப்பேன், வெள்ளை ஈக்கள், சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஆகிய பூச்சிகளை கட்டுபடுத்துகிறது. இது நிகோடினிக் அசிடைல்கொலின் ஏற்பிகளுடன் குறுக்கிடுவதன் மூலம் பூச்சிகளில் உள்ள நரம்பு செல்களுக்கு இடையேயான தொடர்பை சீர்குலைக்கிறது. இது பூச்சியின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைத்து இறுதியில் செயலிழக்க செய்து மரணத்திற்கு வழிவகுக்கிறது.

தயாமெதோக்சம் 25% WG மருந்தின் பயன்பாட்டு அளவு

விவசாய பயன்பாடு : 80 - 100 கிராம்/ ஏக்கருக்கு இலைவழி தெளிக்கவும்.வீட்டு தோட்ட பயன்பாடு : 15 லிட்டர் தண்ணீருக்கு 5 முதல் 10 கிராம் வரை எடுத்து இலைவழி தெளிக்கவும்.

பயிர்கள்

இலக்கு பூச்சிகள்

ஒரு ஏக்கருக்கான அளவு

நெல்

தண்டு துளைப்பான், ஆனைக் கொம்பன் ஈ, இலை சுருட்டுப்புழு, இலைப்பேன்

ஏக்கருக்கு 40 கிராம்

பருத்தி

தத்துப்பூச்சி, அசுவினி, இலைப்பேன், வெள்ளை ஈக்கள்

ஏக்கருக்கு 40 கிராம்

வெண்டை

தத்துப்பூச்சி, அசுவினி, வெள்ளை ஈக்கள்

ஏக்கருக்கு 40 கிராம்

மா

தத்துப்பூச்சி

40 கிராம்/ 15 லிட்டர்

கோதுமை

அசுவினி

ஏக்கருக்கு 20 கிராம்

கடுகு

அசுவினி

20 - 40 கிராம்/ ஏக்கர்

தக்காளி

வெள்ளை ஈக்கள்

80 கிராம்/ ஏக்கர்

கத்தரிக்காய்

வெள்ளை ஈக்கள்

80 கிராம்/ ஏக்கர்

தேயிலை

தேயிலை கொசு பூச்சி

ஏக்கருக்கு 40 கிராம்

உருளைக்கிழங்கு

அசுவினி

ஏக்கருக்கு 40 கிராம்

எலுமிச்சை

எலுமிச்சை சாறு உறிஞ்சும் குதிக்கும் அசுவினி

ஏக்கருக்கு 40 கிராம்

 

தயோக்சம்-ன் முக்கிய நன்மைகள்

தயாமெதோக்சம் 25% WG இன் சில முக்கிய நன்மைகள்:

  • தயாமெதோக்சம் எஞ்சிய செயல்பாட்டைக் கொண்டுள்ளது, அதாவது பயன்பாட்டிற்குப் பிறகு பல வாரங்களுக்கு பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.
  • இந்த பூச்சிக்கொல்லி ஊடுருவி கொல்லும் என்பதால், இலைகளின் அடிப்புறம் அல்லது தாவரத்தின் மற்ற தென்படாத பகுதிகளில் கூட பூச்சிகளுக்கு எதிராக இது பாதுகாப்பை வழங்குகிறது.
  • தயாமெதோக்சம் 25% WG யை இலைவழித் தெளிப்பாக, மண் மூலமாக அல்லது விதை நேர்த்தியாகவும் பயன்படுத்தலாம்.

தயாமெதாக்சம் 25 % Wg பூச்சிக்கொல்லி தொடர்பான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

கேள்வி. தயோக்சமின் செயல் என்ன?

பதில். தயோக்சம் ஒரு ஊடுறுவி கொல்லும் பூச்சிக்கொல்லியாகும், இது தாவரத்தை உண்ணும் பூச்சிகளிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.

கேள்வி. தயோக்சம் பூச்சிக்கொல்லி கருப்பு அசுவினியில் வேலை செய்யுமா?

பதில். ஆம், தயோக்சம் கருப்பு அசுவினிகளுக்கு மிகவும் சிறந்த பூச்சிக்கொல்லியாக பரிந்துரைக்கப்படுகிறது.

கேள்வி. எதற்கு தயோக்சம் முக்கியமாக பரிந்துரைக்கப்படுகிறது?

பதில். பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

கேள்வி. பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த சிறந்த நேரம் எது?

பதில். பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவதற்கான சிறந்த நேரம் பொதுவாக அதிகாலை அல்லது மாலை நேரங்களில் வெப்பநிலை குளிர்ச்சியாகவும் காற்று குறைவாகவும் இருக்கும் நிலையில் பயன்படுத்துவது சிறந்த நேரம்.

View full details